Thursday, July 2, 2009

காதலின்றி வேறில்லை

காதலின்றி வேறில்லை

பட்டாம்பூச்சியின்
வண்ணச்சிறகில்
கைகள் கோர்த்து
அமர்ந்திருக்கிறோம்
நாம்.
வானமெங்கும் சுற்றித்திரிந்த
பட்டாம்பூச்சி
பூவொன்றின் இதழ்களில்
உன்னை இறக்கிவிடுகிறது.
பூவுக்குள் ஓடி மறைகிறாய்
நீ.
பூக்களின் பெயர்க்காரணத்தை
உலகிற்கு அறிவிக்கிறேன்
நான்!

***

ஓடிவந்து என்
கழுத்தைக் கட்டிக்கொண்டு
உன் கன்னம் உரச
நீ பேசும்பொழுதெல்லாம்
விதவித வண்ணங்களாய்
என்னுள் பெய்கிறது மழை.

***

உனக்கு பிடித்த மண்வாசத்தில்
நீயும்
எனக்கு பிடித்த உன்வாசத்தில்
நானும்
ஒற்றை குடைக்குள்
விரல்கள் கோர்த்து
மெளனித்து நடக்கிறோம்.
விரல்களின் ஸ்பரிசத்தில்
வலுக்கிறது காதல்மழை.

***

சிப்பிக்குள் ஒளிந்திருக்கும்
முத்தைப்போல்
உன் கன்னக்குழிக்குள்
ஒளிந்திருக்கிறது
எனக்கான காதல்புன்னகை!



பட்டாம்பூச்சியின்
வண்ணச்சிறகில்
கைகள் கோர்த்து
அமர்ந்திருக்கிறோம்
நாம்.
வானமெங்கும் சுற்றித்திரிந்த
பட்டாம்பூச்சி
பூவொன்றின் இதழ்களில்
உன்னை இறக்கிவிடுகிறது.
பூவுக்குள் ஓடி மறைகிறாய்
நீ.
பூக்களின் பெயர்க்காரணத்தை
உலகிற்கு அறிவிக்கிறேன்
நான்!

***

ஓடிவந்து என்
கழுத்தைக் கட்டிக்கொண்டு
உன் கன்னம் உரச
நீ பேசும்பொழுதெல்லாம்
விதவித வண்ணங்களாய்
என்னுள் பெய்கிறது மழை.

***

உனக்கு பிடித்த மண்வாசத்தில்
நீயும்
எனக்கு பிடித்த உன்வாசத்தில்
நானும்
ஒற்றை குடைக்குள்
விரல்கள் கோர்த்து
மெளனித்து நடக்கிறோம்.
விரல்களின் ஸ்பரிசத்தில்
வலுக்கிறது காதல்மழை.

***

சிப்பிக்குள் ஒளிந்திருக்கும்
முத்தைப்போல்
உன் கன்னக்குழிக்குள்
ஒளிந்திருக்கிறது
எனக்கான காதல்புன்னகை!




என் இத‌யத்தில்
நீ வந்த போதும்
என் இத‌யத்தில் நுழைந்த போதும்
தடுக்க நினைக்கவில்லை காதலை
நீ போகின்ற போதும்
இதயம் வேகுகின்ற போதும்
என்னால் அடக்க முடியவில்லை
சோகத்தை




வார்த்தைகள் கொடுக்கும் வலியை
அறிந்து கொண்டேன்..!
நீ நம் காதலை
மறந்துவிடச் சொன்ன போது..!!


நீ சொன்னது கூட
எனக்கு வருத்தமில்லை...
என்னை நேசித்த உன் இதயத்தை
எங்கே கழற்றி வைத்தாய்
என்று மட்டும் சொல்லிவிட்டு செல்....!



உன்னால்
சந்தோஷங்கள் என்றால்
என்ன என்று
அறிந்து கொண்டேன்!


உன்னால்
துக்கங்கள் என்றால்
என்ன என்று
அறிந்து கொண்டேன்!



உன்னால்
சுகங்கள் என்றால்
என்ன என்று
அறிந்து கொண்டேன்!



உன்னால்
வலிகள் என்றால்
என்ன என்று
அறிந்து கொண்டேன்!


உன்னால்
காதல் என்றால்
என்ன என்று
அறிந்து கொண்டேன்!


உன்னால்
பிரிவு என்றால்
என்ன என்று
அறிந்து கொண்டேன்!



என் இதயம் துடிப்பது உனக்காக,
அதை நீ ஏன் புரிந்து கொள்ள மறுத்தாய்..?
என் சுவாசத்தில் கலந்திருப்பது நீயடி,
அதை நீ ஏன் உனர மறுத்தாய்...?

என் இதயம் இருப்பது உன்னிடம்,
அதை நீ ஏன் காயப்படுத்த நினைக்கிறாய்..?

நான் கண்ணீர் சிந்துவது உன்னால்,
அது தான் நீ விரும்புவது என்றால் சொல்லிவிடு..!
வாழ்னால் முழுவதும் கண்ணீரில் உருகி விடுகிறேன்..!

என்னை இழக்கப் போகிறேன்
உன்னை இழக்க முடியாமல்..!

நீயாக வந்தாய்
நான் நீயாக மறினேன்
நீயாக விலகுகிறாய்
முடியாதடி உன்னை பிரிய
அடுத்த நிமிடமும்..!

நான் வாழ்வது சந்தேகமடி உயிரே
இன்னுமொரு நிமிடம் நான் வாழ்வது
நீ என்னிடம் வருவாய் மீண்டும் என்று
உயிரே உயிர் வாழ்கிறேன் உனக்காகவே…!

மனசு மட்டும்
மாறவே இல்லையே
மறுபடியும் மறுபடியும்
உன்னையே கேட்கிறது

உன்னைத் தேடும் என் இதயம் தினம் கண்ணீர் வடிக்கின்றது
உன் எண்ணங்களை சுமந்த என் மனம் சோகங்களால் வாடி நிற்கிறது
ஒரு முறையாவது உன்னுடன் பேசக்கிடைக்காதா என்று - உன்
விழிகள் சந்திக்காத போதும் வார்த்தைகளாவது
எனை ஆறுதல்படுத்தாதா என.

என்னவளே ஏன்
என்னை மறந்தாய்
என் இனியவளே ஏன்
என்னை பிரிந்தாய்

எங்கிருந்தாலும்
நீ வாழ்கவென
வாழ்த்திட என்
உதடுகள் அசைந்தாலும்

உள்ளம் ஊமையாய்
தினமும் அழுகிறதே
உணர்வுகள் வெடித்து சிதற்கிறதே
உயிரும் விடை பெற துடிக்கிறதே

உறக்கம் மறந்து போனதே
இரக்கம் காட்ட மாட்டாயா
இதய வாசல் திறப்பாயா..?

பழகியகாலம் பசுமையாய் உள்ளத்தில்,
பிரிவின் துயரம் வலியாய் நெஞ்சத்தில்....

சிலர் இறந்து போனால் மனது மறந்து போகும்
சிலர் மறந்து போனாலே மனது இறந்து போகும்

முன்பு,
சாலையை கடக்கும் போது கேளாமல்,
என் கரம் பிடித்து வந்த என் தோழியே….
இன்று,
வாழ்க்கையை கடக்க, நான் கரம் நீட்டியும்,
என் கரம் பற்ற யோசனை ஏனோ…..

மழையில் நான் நனையவில்லை,
ஈரம் காய்ந்து போவதற்கு…..
மணலில் நான் விழவில்லை,
உதறி விட்டு நடப்பதற்கு…..
களவையும் கற்று மற என்றனர்….
காதலை கற்றேன், மறப்பதெப்படி?

நேசிக்கும் முன் யோசி
நேசித்தப்பின் யோசிக்காதே அது
நேசித்த இதயத்தையே காயப்படுத்தும்

வாழ்க்கையெனும் பேருந்தில் ஏறிச் செல்ல…
நாம் எடுத்துக் கொண்ட பயணச்சீட்டு….. காதல்.

அதை பாதியிலேயே கிழித்தெறிந்து விட்டு
என்னை இறக்கி விட்டுச் சென்று விடாதே!

உன்
கோபங்களை
தாபங்களை
மன்னித்துவிடுகிறேன்
முத்தத்தால் நீ முடிப்பதானால்!

என் கண்ணீர்
துளிகளால்;
உனக்கு வைரமாலை!

காய்வதேயில்லை!
நீ தந்த
முத்தங்களின் ஈரம்!

பார்வை விட்டு
போன பின்னும்
என்னில் சிறகடிக்கும்
உனக்கான எண்ணங்கள்
பெய்த பிற்பாடும்
மழைக்கின்ற
மரம் கணக்காய்.




உண்மை

என் இறுதி ஊர்வலத்திலாவது
என்னை காதலித்தது உண்மை என்று சொல்
அந்த வார்த்தை நிச்சயம் என்னை
சொர்க்கம் கொண்டு செல்லும்


அன்று உனைப் பார்த்தவன்

அன்று உனைப் பார்த்தவன்
இன்று உன்னை மறந்திடுவான் என்று
என்றுமே நீ நினைக்காதையடி..

அன்றெனக்கு நீ கொடுத்தவை
இன்று எனக்குள் நினைதினிக்குதடி
அன்று உனக்கு நான் கொடுத்ததை
இன்று உனக்குள் நீ இரசிக்கலையா .....!

சென்று வாருங்கள் என்று விழியால்
வழியனுப்பி வைத்தவளே
காத்திருப்பேன் என்று சொன்னவளே
இன்று என்னை மறந்திட்டயா..
சொல் அன்பே......




மறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை
மறப்பேனா அன்று
உன்னிரு விழிகள்
எனைப் பார்த்ததை
உடல் வியர்த்ததை
.
மறப்பேனா அந்த
நெருக்கத்தில்
ஒரு புன்னகையை
சிறு கண்ணசைவை
.
மறப்பேனா அன்று
எம் உடல்கள்
மெல்ல உரசியதை
என்னுயிர் உருகியதை
.
மறப்பேனா அங்கு
நடனசாலையில்
எம்கரங்கள் பற்றியதை
சுரங்கள் வற்றியதை
.
மறப்பேனா அன்று
எமை மறந்து
இணைந்ததை காமத்தீ
அணைந்ததை.
.
மறப்பேனா அன்று
எனை நீ வெறுத்துப்
பிரிந்ததை என்னுயிர்
எரிந்ததை




--------------------------------------------------------------------------------

" நீ யாரை காதலிக்கிறாய் என்று "



அவளையே நினைத்து கவிதை எழுதி
அவளிடம் கொடுத்தேன் அதை
படித்து விட்டு என்னிடம் அவள் கேட்டால்
" நீ யாரை காதலிக்கிறாய் என்று "

No comments:

Post a Comment